மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்சவம் என அழைக்கப்படும் சித்திரை திருவிழா ஏப்ரல் 22-ம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை நடைபெறுகிறது.
மதுரை: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகர மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் கஹ்லோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்சவம் என அழைக்கப்படும் சித்திரை திருவிழா ஏப்ரல் 22-ம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. கோவில் பூசாரி வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது.கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது.
கொடியேற்றத்தை முன்னிட்டு கோயிலின் முக்கிய தெய்வங்களான மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் ஆகியோரின் ஊர்வலம் கற்பக விருட்சம் மற்றும் சிம்ம வாகனத்தில் கொடிமரம் அருகே உள்ள மண்டபத்தை அடைந்தது.
கோயில் யானை பார்வதி, கவசத்தால் அலங்கரிக்கப்பட்டாள். இதனிடையே, கோயில் யானையின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர் பி.டி.ஆர், பார்வதியை சந்தித்து பழங்களை ஊட்டினார்.
மீனாட்சி அம்மன் கோயிலில் 13 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் ஏப்ரல் 30-ஆம் தேதி பட்டாபிஷேகம், மே 2-ஆம் தேதி திருக்கல்யாணம், மே 3-ஆம் தேதி பிரசித்தி பெற்ற சித்திரைத் தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
மீனாட்சி அம்மன் கோவிலில் மே 4ம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது. சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 5ம் தேதி நடக்கிறது.