ஆஸ்கர் விருது பெற்ற 'எலிபென்ட் விஸ்பர்ஸ்' நட்சத்திரங்களுக்கு தல தோனி, சிஎஸ்கே வாழ்த்து!
தல தோனி தற்போது ஐபிஎல் 2023 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துகிறார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய சிஎஸ்கே போட்டிக்காக மஞ்சள் ஆர்மியுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ளார்.
சென்னை முகாமில் ஆஸ்கர் விருது பெற்ற இந்தியர்களை எம்.எஸ்.டி சந்தித்தார்.
ஆஸ்கர் விருது பெற்ற தமிழ் ஆவணப்படமான ‘எலிபென்ட் விஸ்பர்ஸ்’ நட்சத்திரங்களுக்கு தோனி மற்றும் சிஎஸ்கே அதிகாரிகள் ரூ.5 லட்சம் வழங்கி கவுரவித்தனர்.
இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் பொம்மன்-பெல்லி தம்பதியினர் தங்கள் பெயருடன் சிஎஸ்கே ஜெர்சிகளை கேப்டனிடமிருந்து பெற்றனர். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மஞ்சள் படை பகிர்ந்துள்ளது.
அந்த வீடியோவில் தோனியின் மகள் ஸிவா வாழ்த்து தெரிவித்துள்ளார். பொம்மன், பெல்லி மற்றும் கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஆகியோர் தங்கள் ஆஸ்கர் விருதுடன் தல தோனியுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எலிபென்ட் விஸ்பர்ஸ் ஒரு தம்பதிக்கும் அனாதை குட்டி யானைக்கும் இடையில் உருவாகும் பிணைப்பைப் பற்றியது.