பிப்ரவரியில் 46 லட்சம் பேரின் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்…

பிப்ரவரியில் விதிகளை மீறிய புகாரில், 45.97 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்.

உலகளவில் பிரபலமான செய்தியிடல் தளமாக வாட்ஸ் அப் நிறுவனம் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது.. இந்தியாவில் சுமார் 500 மில்லியன் பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான செய்தியிடல் தளமாம வாட்ஸ் அப் உள்ளது.. இந்நிலையில் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 45 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.. வாட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கையில் “ புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் படி, பிப்ரவரி 1 மற்றும் பிப்ரவரி 28 க்கு இடையில், “4,597,400 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டன.. அவற்றில் 1,298,000 கணக்குகள், பயனர்களிடம் இருந்து புகார்களை பெறுவதற்உ முன்கூட்டியே தடை செய்யப்பட்டன..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பயனர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்தது தெரியவந்துள்ளது. தவறான தகவல்களைத் தடுப்பது, இணைய பாதுகாப்பை ஊக்குவித்தல் ஆகிய காரணங்களுக்காக கணக்கு தடை செய்யப்படுகிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..

நாட்டில் பிப்ரவரி மாதத்தில் மற்றொரு சாதனையாக 2,804 புகார் அறிக்கைகளைப் பெற்றதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.. வாட்ஸ் அப் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நாங்கள் எங்கள் வேலையில் வெளிப்படைத்தன்மையுடன் தொடர்வோம் மற்றும் எதிர்கால அறிக்கைகளில் எங்கள் முயற்சிகள் பற்றிய தகவல்களைச் சேர்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்..

இதற்கிடையில், மில்லியன் கணக்கான இந்திய சமூக ஊடக பயனர்களுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சியில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர், ராஜீவ் சந்திரசேகர் சமீபத்தில் குறைகள் மேல்முறையீட்டுக் குழுவை (GAC) தொடங்கினார், இது உள்ளடக்கம் மற்றும் பிற சிக்கல்கள் தொடர்பான பயனர்களின் பிரச்சனைகளை ஆராயும் என்று தெரிவிக்கப்படுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *