ஃபேக் நியூஸ் பரப்பி அருவருப்பு அரசியல் செய்றாங்க.. கவனமா இருக்கணும்.. அமைச்சர் உதயநிதி பேச்சு!
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மாரத்தானில் ஓடும் திருநங்கைகளுக்கு ஊக்கத்தொகையாக எனது சொந்த செலவில் திமுக இளைஞரணி சார்பாக ரூ.1,000 வழங்கப்படும். நான் சட்டமன்றத்தில் எனது கன்னிப்பேச்சில் பேசியதே திருநங்கைகளுக்காகத்தான்.” என்றார்.
தயாநிதி மாறனை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்காமலேயே அவர் வந்திருப்பதாகச் சொன்னார்கள். அவர் வந்துதான் ஆக வேண்டும். ஏனென்றால் அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் வேறு வருகிறது என சிரித்தபடியே பேசினார் உதயநிதி ஸ்டாலின். மத்திய சென்னையில் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என்றும் உதயநிதி உறுதியளித்தார். மேலும் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இது வாட்ஸ்-அப் யுகம், அதிகமாக ரீச் ஆகணும், ரீட்வீட் ஆகவேண்டும் என்பதற்காக உண்மையா பொய்யா என்றே ஆராயமல் தவறான தகவல்களை ஃபார்வர்டு செய்துவிடுகிறோம். செய்தி உண்மையா? இல்லையா என்று பகுத்தறிய வேண்டும். தமிழ்நாட்டில் சிலர் அருவருப்பு அரசியல் செய்து வருகின்றனர். Fake நியூஸ் அனுப்புகிறார்கள். பகுத்தறிவை வளர்த்துக்கொண்டு, நமக்கு வரும் செய்தியை ஆராய்ந்து உண்மையா பொய்யா என்பதை அறிந்து, இன்னொருவருக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.