தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது
தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச் சாவடிகளில், 29 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. ரூ.10 முதல் ரூ.60 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் 2 முறை கட்டண உயர்வு நடைபெறுவது வழக்கம். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. இதனால் லாரி ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் நிலவியுள்ளது.
காருக்கு ரூ.60லிருந்து ரூ.70ஆகவும், இலகுரக வாகனத்துக்கு ரூ.105லிருந்து ரூ.115ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.205லிருந்து ரூ.240ஆகவும் கட்டணம் நிர்ணயம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், சுங்கக்கட்டணத்தையும் உயர்த்தியிருப்பது பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர். சுங்கக்கட்டண உயர்வால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விளையும் உயரக்கூடும் என லாரி ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர்.