திருப்பதியில் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் பக்தர்களின் திருட்டு போன செல்போன்கள் கண்டுபிடிப்பு.
திருப்பதியில், திருடு போன பக்தர்களின் செல்போன்களை, அதிநவீன தொழில்நுட்பம் மூலம் மீட்கப்பட்டு, கொரியர் சர்வீஸ் பங்களிப்புடன் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பதியில் செல்போன்களை பறிகொடுக்கும் பக்தர்கள், காவல் நிலையத்துக்கு வராமலேயே, தொழில்நுட்பம் மூலம் புகார் அளிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக, மொபைல் ஹன்ட் என்ற பெயரில் பிரத்யேக வாட்ஸ்அப் நம்பர் பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காணாமல் போன செல்போன்களில், 79 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 780 செல்போன்கள் மீட்கப்பட்டு, மூன்று கட்டங்களாக உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், 4ஆம் கட்டமாக 45 லட்சம் மதிப்பிலான 250 செல்போன்களை மீட்டு, திருப்பதி எஸ்.பி., பரமேஸ்வர ரெட்டி உரியவர்களிடம் ஒப்படைத்தார். மேலும், செல்போன்களை தவறவிட்ட பக்தர்களுக்கு கொரியர் சர்வீஸ் மூலம் கட்டணம் இல்லாமல் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டன