துரை வைகோ பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
தஞ்சாவூர்.
மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ அவர்களின் பிறந்த நாளான (02-04-2023) நேற்று தஞ்சை ராஜா மிராசுதாரர் மருத்துவமனையில் சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடு தஞ்சை மாநகர, தெற்கு மாவட்டம், ஒன்றிய மதிமுக சார்பில் ஏற்பட்டு செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான பொதுமக்களும் நிர்வாகிகளும் பயன் பெற்றனர்.
மாநகர செயலாளர் துரை சிங்கம், மாநகராட்சி உறுப்பினர் சுகந்தி, ஹாஜா ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன்,அசோக், மணிவாசகம் மற்றும் வட்ட செயலாளர்கள் சம்சாரவி, மாணிக்கவாசகம் செல்வராஜ் மற்றும் இணையதளத்தை சார்ந்த சிவராசன் மற்றும் மாநகர துணை செயலாளர்கள், ஒன்றிய துணை செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்