‘சிஎஸ்கே, மும்பை மேட்ச விடுங்க’…இந்த 2 அணிகள் மோதும் போட்டிதான் இப்போ ட்ரெண்ட்…ட்விஸ்ட் உறுதி!

ஐபிஎலில் சிஎஸ்கே, மும்பை மேட்சைவிட இந்த 2 அணிகள் மோதும் மேட்ச்தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

ஐபிஎல் 16ஆவது சீசனின் 8ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

பஞ்சாப் இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய பஞ்சாப் கில்ஸ் அணியில் ஓபனர்கள் பிரப்சிம்ரன் சிங் 60 (34), ஷிகர் தவன் 86 (56) ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்கள். குறிப்பாக, 11 ஓவரின்போது தவன் 29 (29) ரன்களை மட்டும் சேர்த்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்துதான் அதிரடியாக விளையாடி 86 (56) ரன்களை குவித்தார். இறுதியில் ஜிதேஷ் ஷர்மா 27 (16) தனது பங்கிற்கு ரன்களை சேர்த்தார்.

இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 197/4 ரன்களை குவித்து அசத்தியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னிங்ஸ்:

இலக்கை துரத்திக் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் 42 (25), ஷிம்ரோன் ஹெட்மையர் 36 (18), துரூவ் ஜுரேல் 32 (15) ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்கள். இருப்பினும், கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டபோது, சாம் கரன் 10 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்ததால், ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 192/7 ரன்களை மட்டும் சேர்த்து, 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

முதல்முறை அல்ல:

இப்படி இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் கடைசிவரை பரபரப்பாக செல்வது இது முதல்முறையல்ல. 2020ஆம் ஆண்டில் இருந்தே ராஜஸ்தான், பஞ்சாப் ஆட்டங்கள் கடைசிவரை நீடித்திருக்கிறது.

2020-ல் பஞ்சாப் அணி ராஜஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அடுத்து ராஜஸ்தான் அணி பஞ்சாப்புக்கு எதிராக 226 ரன்கள் இலக்கை, 19.4 ஓவர்களில் துரத்தி வெற்றியைப் பெற்றது.

தொடர்ந்து ராஜஸ்தானுக்கு எதிராக பஞ்சாப் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப்பெற்ற நிலையில், அடுத்து ராஜஸ்தான் அணி பஞ்சாப்புக்கு எதிராக 190 ரன்கள் இலக்கை 19.4 ஓவர்களில் துரத்தி வெற்றியைப் பெற்றது. தற்போதும் போட்டி கடைசிவரை நீடித்திருக்கிறது. ஆகையால், இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *