கனடா ஓபன் டென்னிஸ் போட்டியில் சிந்து, சென் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

கனடா ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷ்யா சென் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனை சிந்து 21-16, 21-9 என்ற நேர் செட் கணக்கில் கனடாவின் டாலியா என்.ஜி.யை எளிதாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சிந்து அடுத்ததாக ஜப்பானின் நட்சுகி நிடைராவையும், சென் பிரேசிலின் இகோர் கொய்லோவையும் எதிர்கொள்கின்றனர்.

ஆனால் சாய் பிரணீத் 12-21, 17-21 என்ற செட் கணக்கில் கோயல்ஹோவிடம் தோல்வியடைந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ருத்விகா ஷிவானி கட்டே 12-21, 3-21 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்தின் சுபானிடா கட்டெத்தோங்கிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

சிந்து, சென் மற்றும் ஆண்கள் இரட்டையர் ஜோடியான கிருஷ்ண பிரசாத் கராகா மற்றும் விஷ்ணுவர்தன் கவுட் பஞ்சாலா ஆகியோர் இன்று மோதவுள்ளனர்.

கிருஷ்ணா- விஷ்ணுவர்தன் ஜோடி 2-ம் நிலை வீரரான இந்தோனேசியாவின் முகமது அஹ்சான்- ஹெண்ட்ரா செட்டியாவான் ஜோடியை எதிர்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *