தோனிக்கு தான் இது முக்கிய ஐபிஎல் தொடர்.. நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்..வாட்சன் கருத்து
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் 16வது சீசன் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை நான்கு முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.
வெற்றியுடன் தொடரை தொடங்க இரண்டு அணிகளும் கடுமையாக மோதும் என்பதால் ஆட்டத்தில் பரப்பரப்பில் பஞ்சம் இருக்காது. இந்த நிலையில் கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி சந்தித்தது. புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்தது. இதுவரை சென்னை அணி இரண்டு முறை தான் பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் இருந்துள்ளது.