ரோகிணி தியேட்டர் விவகாரம்: வேற்றுமையை ஏற்றுக் கொள்ள முடியாது – விஜய் சேதுபதி
இந்த பூமி அனைத்து மனிதர்களும் ஒன்றாக வாழ்வதற்காக படைக்கப்பட்டு உள்ளது என விஜய் சேதுபதி கூறினார்.
நடிகர்கள் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடித்து இருக்கும் பத்து தல திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. கன்னடத்தில் வெற்றிபெற்ற முஃப்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான இதை சில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கி உள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இதனிடையே பத்து தல படம் பார்ப்பதற்காகச் சென்னை கோயம்பேட்டில் இருக்கும் ரோகிணி திரையரங்கத்திற்கு நரிக்குறவர் மக்கள் சென்று உள்ளார்.
அவர்கள் டிக்கெட் எடுத்து தியேட்டருக்கு வெளியே அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அவர்களை தியேட்டர் நிர்வாகம் படம் பார்க்க அனுமதி வழங்கினர்.
இந்த விவகாரம் தொடர்பாக விஜய் சேதுபதி பேசுகையில், “எங்கேயும், எப்போதும் இன்னொரு மனிதன் ஒடுக்கப்படுவதும், நசுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த பூமி அனைத்து மனிதர்களும் ஒன்றாக வாழ்வதற்காக படைக்கப்பட்டது. அதில் வேற்றுமையை யார், எந்த வகையில் செய்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது” என தெரிவித்தார்.
சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், எங்கள் முதல்வர், எங்கள் பெருமை என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி ரோகிணி தியேட்டர் திரையரங்கம் விவகாரம் தொடர்பாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் தின செய்திகள் இனைய தளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.