சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வெளிநாடு யோகம்..குபேர பண வரவு யாருக்கு கிடைக்கும்?

சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வெளிநாடு யோகம்..குபேர பண வரவு யாருக்கு கிடைக்கும்?

சென்னை: சோபகிருது என்றால் மங்கலகரமான செயல்களை செய்யக்கூடிய ஆண்டு. சோபகிருது வருடத்தில் பிறந்தவர்கள் சகல விதத்தில் மேன்மையுடனும் நற்காரியங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள் என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் புத்தாண்டில் நிறைய மங்கலகரமான செயல்கள் அதிகம் நடைபெறும். சனி, குரு, ராகு கேது ஆகிய நான்கு ராஜ கிரகங்களின் பயணம் தமிழ் புத்தாண்டு நாளில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்களைத் தரப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.


மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே..சோபகிருது தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! உங்களுக்கு இது அற்புதமான பலன்களை தரப்போகும் ஆண்டாக அமையப்போகிறது. தொழில்,வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு குரு ராகு இணைவினால் நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் புரமோசன் கிடைக்கும். ஜென்ம ராசியில் உள்ள குரு பகவானின் பார்வை 5,7,9ஆம் வீடுகளின் மீது விழுகிறது உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். திருமணம் கைகூடி வரும். மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது.

வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரும். நினைத்த காரியம் கைகூடி வரும். மாணவ மாணவிகளுக்கு நினைத்த கல்லூரிகளின் படிக்க இடம் கிடைக்கும். பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.


நல்ல உணவுகளை சாப்பிடுங்கள். பெண்கள் எதையும் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் தொடர்பான நோய்கள் வந்து நீங்கும். முன்னோர்களின் ஆசியால் புத்திரபாக்கியம் கைகூடி வரும்


ரிஷபம்

சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே..தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமான புத்தாண்டாக அமையப்போகிறது. எதையும் மனதிற்கு வைத்து வெற்றி பெற்ற பின்னர் வெளியே சொல்லலாம்.

கோபம் குரோதம் நீங்கும். அச்சம் நீங்கி ஆற்றல் அதிகரிக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். வீட்டிலும் வெளியிடத்திலும் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். குரு பகவான் 12ஆம் வீட்டில் உள்ள ராகு உடன் இணைந்து பயணம் செய்வதால் தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் வரப்போகிறது. கால்களில் கவனம் தேவை. வீட்டில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனமும் நிதானமும் தேவை. செலவுகள் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும்


மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்கள் ராசி அதிபதி புதன்தான் இந்த ஆண்டு ராஜா என்பதால் உங்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும்


லாப ஸ்தானமான 11ஆவது வீட்டில் கிரகங்கள் கூடியுள்ளன. வெற்றி மீது வெற்றிகள் தேடி வரப்போகிறது. தெய்வங்களின் அருளாசியும் முன்னோர்களின் அருளும் கிடைக்கப்போகிறது. தொழிலில் வெற்றியும் லாபமும் கிடைக்கப்போகிறது. வேலையில் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். இதனால் வீடு மாற்றம் உண்டாகும். விஐபிகளின் அறிமுகமும் அதனால் வெற்றிகளும் தேடி வரும்.


கடகம்

சந்திர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும் ஆண்டாக உள்ளது. புத்திசாலித்தனம் கூடும். அஷ்டமத்து சனியால் அல்லல் பட்டுக்கொண்டிருப்பீர்கள். பாக்ய ஸ்தானத்தில் ஓராண்டு பயணம் செய்த குருபகவான் புத்தாண்டு முதல் தொழில் ஸ்தானத்தில் உள்ள ராகு உடன் இணைகிறார். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்