“இதை” போய் அங்கே கேளுங்க.. “பால் பாயாசம்”ன்னு நினைச்சீங்களா.. இதற்கு பெயர் அறம்.. ஆத்திரப்பட்ட திமுக

"இதை" போய் அங்கே கேளுங்க.. "பால் பாயாசம்"ன்னு நினைச்சீங்களா.. இதற்கு பெயர் அறம்.. ஆத்திரப்பட்ட திமுக

சென்னை: “1000 ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் என்று கேட்கும் கும்பலுக்கு, ஆயிரம் ரூபாய் கூட இல்லாதவரிடம் அதை போய் கேளு” என்று கோபப்பட்டுள்ளது திமுகவின் முரசொலி.

தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பானது சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.


தமிழகத்தில் 2 கோடிக்கு மேல் ரேஷன் கார்டுகள் இருக்கிறது… ஆனால் அரசோ வெறும் 7 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பதால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று அதிமுக இதுகுறித்து கேள்வியை எழுப்பி வருகிறது.. தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது ஏன்? என்றுதான் புரியவில்லை என்று கேட்கிறார் டிடிவி தினகரன்.. எந்த அடிப்படையில், தகுதியான குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்படுவர் என்று பாஜகவின் மூத்த தலைவர் வானதி சீனிவாசனும் கேட்டு வருகிறார்.

தலையங்கம்

இந்த உரிமைத்தொகை 1000 ரூபாய் யார் யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து, திமுக தரப்பில் அடிக்கடி விளக்கங்கள் கூறி தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது.. ஆனாலும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் இதுவரை நிற்கவில்லை.. இந்நிலையில்தான், இதுகுறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலி இதுகுறித்து ஒரு தலையங்கத்தை வெளியிட்டு, காட்டமான கேள்வியையும் கேட்டுள்ளது.. அந்த தலையங்க கட்டுரையில், “ஒரு கோடி பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க அரசு முடிவு எடுத்திருக்கிறது. இதற்காக 7,000 கோடியை நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்று முதல்வர் அறிவித்ததும், அனைவருக்கும் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது

டிப்ஸ் பாக்கெட் மணி

மாதம் ஆயிரம் ரூபாய் என்பது யார் யாரின் முகத்தில் எல்லாம் மலர்ச்சியை ஏற்படுத்துமோ அவர்கள் அத்தனை பேருக்கும் இந்தத் திட்டம் பலன் கொடுக்கும் என்று முதல்வர் விளக்கம் அளித்திருக்கிறார். ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்டாலும் பதில் ஒன்றுதான். மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வை சிறிதேனும் மாற்றிவிடும் என்று நம்பும் எந்த குடும்பத் தலைவியையும் இந்த திராவிட மடல் அரசு கைவிட்டு விடாது என்று என்கிறார் முதல்வர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்தத் திட்டம் பசித்த வயிறுகளுக்கான சோறு தானே தவிர, எல்லாம் சாப்பிட்டவர்களுக்கு தரப்படும் பால் பாயாசம் அல்ல. இது பெண்களுக்கான நன்கொடையோ பாக்கெட் மணியோ, டிப்ஸ் அல்ல.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *