"இதை" போய் அங்கே கேளுங்க.. "பால் பாயாசம்"ன்னு நினைச்சீங்களா.. இதற்கு பெயர் அறம்.. ஆத்திரப்பட்ட திமுக
“1000 ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் என்று கேட்கும் கும்பலுக்கு, ஆயிரம் ரூபாய் கூட இல்லாதவரிடம் அதை போய் கேளு” என்று கோபப்பட்டுள்ளது திமுகவின் முரசொலி.
தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பானது சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இழி அரசியல்
1000 ரூபாயை எதன் அடிப்படையில் ஒதுக்கீடு செய்வீர்கள் என்று இந்த அனைத்து எதிர்க்கட்சியினரும் கேள்வியை கேட்டு வரும்போது, நாம் தமிழர் கட்சி சீமான் மட்டும், இதைவிட ஒருபடி மேலே போய், “எங்கள் வீட்டு பெண்களுக்கு உரிமை தொகைக்கான தகுதியை நிர்ணயிக்க நீ யார்?” தேர்தல் வாக்குறுதியில் தகுதி என்ற வார்த்தையே இல்லையே ஏன்? என்று கேள்வி வருகிறார்.. இப்படியான விமர்சனங்களும், வாதங்களும், குற்றச்சாட்டுகளும், அரசியல் தளத்தில் வெடித்து வருகிறது.. மொத்தத்தில், அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் முக்கிய வலியுறுத்தலாக இருந்து வருகிறது.