திராவிட மாடல் ஆட்சியின்
திராவிட மாடல் ஆட்சியின் சுயமரியாதை - பகுத்தறிவு வெளிச்சம் ஒளிரும் பட்ஜெட்- ஓஹோவென புகழ்ந்த கி.வீரமணி
சென்னை: திமுக அரசின் நிதிநிலை அறிக்கையானது, திராவிட மாடல் ஆட்சியின் சுயமரியாதை – பகுத்தறிவு வெளிச்சம் ஒளிரும் பட்ஜெட் என பாராட்டியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்ட விரிவான அறிக்கை: ஓர் அரசின் நிதிநிலை அறிக்கை என்பது வெறும் வரவு – செலவு கணக்குக்கான ஆண்டறிக்கை மட்டுமல்ல; அதையும் தாண்டி, அந்த அரசின் கொள்கை திட்டங்களை செயலாக்கி, மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதோடு, மக்களாட்சியில் நடைபெறும் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை அவ்வப்போது எப்படியெல்லாம் நிறைவேற்றி, மக்களின் – வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெருக்குவது என்பதாகும்!தி.மு.க.வின் தனி முத்திரை அதன் தேர்தல் வாக்குறுதியே! சில தேர்தல்களுக்குமுன் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையே இந்திய அரசியலில் கதாநாயகனாகவே வர்ணிக்கப்பட்டதை மறந்துவிட முடியாது! ‘சொன்னதைச் செய்வோம்; செய்வதையே சொல்வோம்’ என்பதனை செயலி