வாங்க வந்து நல்லா பேசுங்க! பரிசுகளை அள்ளுங்க! சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு திமுக சட்டத்துறை அழைப்பு!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை யொட்டி திமுக சட்டத்துறை சார்பில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
ஸ்டாலின் 70வது பிறந்த நாளினை முன்னிட்டு, தி.மு.க. சட்டத் துறையின் சார்பில், மாவட்டங்கள் அடங்கியுள்ள மண்டல வாரியாக அரசியலமைப்புச் சட்டப் “பிரிவு14ம் – சமூகநீதியும்” எனும் தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ‘பேச்சுப் போட்டி’ மண்டல வாரியாக நடைபெற உள்ளது.
மண்டல வாரியாக நடைபெறும் பேச்சுப் போட்டியில், ஒவ்வொரு மண்டலத்திலும் சிறந்த முறையில் பேசி, முதல் ஐந்து இடங்களைப் பெறும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான இறுதி பேச்சுப் போட்டி வருகிற 15-04-2023, சனிக்கிழமை, மாலை 3.00 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும்.