புதுடெக்னீக்.. ‛கூகுள்பே’யில் லஞ்சம்.. ஏன் தெரியுமா? நாமக்கல்லில் சிக்கிய 3 அதிகாரிகள்.. வழக்கு
புதுடெக்னீக்.. ‛கூகுள்பே’யில் லஞ்சம்.. ஏன் தெரியுமா? நாமக்கல்லில் சிக்கிய 3 அதிகாரிகள்.. வழக்கு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியாற்றி வரும் செவிலியர்கள் விருப்ப பணியிட பெற கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில் வேலையில் இருந்து விடுவிக்க அவர்களிடம் இருந்து கூகுள்பேயில் ரூ.35 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில் 3 சுகாதாரத்துறை அதிகாரிகள் சிக்கினர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள செவிலியர்கள் பணியிடங்கள் நேரடியாக ஒப்பந்த முறையில் அவ்வப்போது நிரப்பபட்டு வருகிறது. தற்போதும் அனைத்து மாவட்டங்களில் இவ்வாறு பலர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தான் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க கலந்தாய்வு கூட்டம் நடந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களில் இது தனித்தனியாக நடைபெற்று வருகிறது.
பணியிட மாறுதல் இந்நிலையில் தான் நாமக்கல்லில் செவிலியர்கள் கேட்கும் இடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு நடந்தது. இதில் செவிலியர்கள் கேட்கும் இடங்கள் வழங்கப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தை பெறுத்தவரை 76 செவிலியர்களுக்கு அவர்கள் விருப்பத்தின் பேரில் அவர்கள் கேட்ட இடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
லஞ்சம் கேட்பதாக புகார்
இந்நிலையில் தான் இந்த பணியிடமாற்றத்துக்கு செவிலியர்களிடம் லஞ்சம் கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதாவது புதிய பணி இடத்துக்கு செல்ல தற்போது வேலை செய்யும் இடத்தில் இருந்து முறைப்படி விடுபட வேண்டும். ஆனால் லஞ்சம் வழங்காத செவிலியர்களை பணியில் இருந்து விடுவிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ரூ.35 ஆயிரம் வரை லஞ்சம்
மேலும் பணியில் இருந்து விடுவிக்க ரூ.35 ஆயிரம் வரை லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த தொகையை சுகாதாரத்துறை அதிகாரிகள் கையில் வாங்காமல், கூகுள்பே மூலம் பெற்றதாக புகார் எழுந்தது. இப்படி லஞ்சம் கொடுத்தவர்களை பணியில் இருந்து விடுவித்த நிலையில் தாமதம் செய்வதர்களை விடுவிக்காமல் இருந்தததாக கூறப்படுகிறது.
3 பேர் மீது வழக்கு
இதுபற்றிய புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கூகுள்பே மூலம் செவிலியர்களிடம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் முத்துமணி, மற்றும் சக்திவேல் ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.