ரஜினியுடன் முதன்முறையாக இணையும் பிரபலம்… மும்பையில் லால் சலாம் டீம்?
ரஜினியுடன் முதன்முறையாக இணையும் பிரபலம்... மும்பையில் லால் சலாம் டீம்?
மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். மேலும், தனது மகள் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவும் கமிட் ஆகியுள்ளார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் திருவண்ணாமலையில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெறவுள்ளதாகவும், இதில் ரஜினியுடன் முதன்முறையாக ஒரு பிரபலம் இணையவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
லால் சலாம்
ஷூட்டிங் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. நெல்சன் இயக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் ரஜினி. தனது மகள் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும், தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் ஹீரோவாகவும் நடிக்கவுள்ளார். இதில், லால் சலாம் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் திருவண்ணாமலையில் தொடங்கியது.
ரஜினியுடன் இணையும் பிரபலம்
விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடிக்கும் லால் சலாம் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் ரஜினியின் போர்ஷன் மட்டும் மும்பையில் படமாக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. மும்பையில் உள்ள பிரலமான ஸ்டுடியோவில் ரஜினியின் காட்சிகளை எடுக்க ஐஸ்வர்யா முடிவு செய்துள்ளாராம். இதில் ஒரு பிரபல நடிகரும் ரஜினியுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
மும்பையில் லால் சலாம் டீம்
அதன்படி, அவருடன் காமெடி நடிகர் தம்பி ராமையா முதன் முறையாக இணைந்து நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ரஜினியின் கெஸ்ட் ரோல் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், தம்பி ராமையா அவருடன் காமெடியில் கலக்க காத்திருக்கிறாராம். இருவருக்குமே சிறிது நேரம் தான் காட்சிகள் என்றாலும், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனையடுத்து லால் சலாம் படக்குழுவினர் தற்போது மும்பையில் முகாமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
விரைவில் தலைவர் 170
கடந்த வாரம் மும்பையில் நடைபெற்ற நீதா அம்பானியின் கலாச்சார மையம் திறப்பு விழாவில் ரஜினி கலந்துகொண்டார். அப்போது அவரது புதிய லுக் ரசிகர்களிடம் வைரலானது. இந்த விழாவை முடித்துவிட்டு அப்படியே லால் சலாம் படத்தின் ஷூட்டிங்கையும் நிறைவு செய்துவிடலாம் என ரஜினி திட்டமிட்டுள்ளாராம். இன்னொரு பக்கம் ஜெயிலர் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து விரைவில் தசெ ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் ரஜினி இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.