மதுரை திருமங்கலம்-ஒத்தக்கடை வழித்தடத்தில் ரூ.8,500 கோடியில் மெட்ரோ ரயில் அமைக்கப்பட உள்ளது.
மதுரை: மதுரை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் முதலில் திருமங்கலம் – ஒத்தக்கடை இடையே செயல்படுத்தப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜூனன் தெரிவித்துள்ளார். அர்ச்சுனன் தலைமையிலான குழுவினர், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து, திருமங்கலம் – ஒத்தக்கடை 31 கி.மீ., துாரத்திற்கு, 8,500 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கப்படும்.
திருமங்கலம், உச்சிப்பட்டி துணைக்கோள் நகரம், மதுரை ரயில்வே சந்திப்பு, மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. முன்னதாக திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூனன், வைகை ஆற்றின் அருகே சுரங்க பாதை அமைக்கப்படும் என்றும், அந்த பகுதியை அமைக்கும் போது குழுவினர் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்றும் கூறினார். “மெட்ரோ திட்டம் இப்பகுதிகளில் உள்ள பாரம்பரிய நினைவுச்சின்னங்களை பாதிக்காது. நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது,” என்றார்.
மேலும், வரவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை அருகே ஒரு மெட்ரோ நிலையம் பரிசீலனையில் உள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக திருமங்கலம்-ஒத்தக்கடை வழித்தடத்தில் கவனம் செலுத்த உள்ளோம். மதுரை கல்லூரி, மீனாட்சி அம்மன் கோயில், வைகை ஆறு அருகே கட்டுவது சவாலானது.