மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றிய மதிமுக இளைஞர் அணி சார்பில் தென்னங்கன்றுகள் வழங்கல்!
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றிய இளைஞரணி சார்பில் குத்தாலம் பேரூந்து நிலையத்தில் தலைமை கழக செயலாளர், இளம்தலைவர் துரை வைகோ அவர்களின் 51 வது பிறந்தநாள் நிகழ்வாக இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் பயனாளிகளுக்கு 51 தென்னங்கன்றுகளை மாநில இளைஞர் அணிச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி வழங்கினார்.
நிகழ்வில் குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.என்.வாசு, குத்தாலம் பேரூர் செயலாளர் ஆ.கருணாநிதி, பேரூர் துணைச் செயலாளர் த.முருகேசன், குத்தாலம் வர்த்தக சங்க தலைவர் ஆ.தங்கப்பன், பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.சுவாமிநாதன், ஒன்றிய துணைச் செயலாளர் ஸ்ரீகண்டபுரம் செல்வம், நக்கம்பாடி ஊராட்சி செயலாளர் காளிமுத்து, தொண்டர் அணி என்.எஸ்.முத்து, பேரூர் இளைஞர் அணி கே.கார்த்தி, பேரூர் மாணவர் அணி மு.தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.