மாபெரும் கபடி போட்டி – நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சி பள்ளிப்பட்டி
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சி பள்ளிப்பட்டி எனும் கிராமத்தில் பகவதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி(12-04-2023, 13-04-2023) நடைபெற இருக்கிறது.
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு அணிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பல வருடங்களுக்கு பிறகு இந்த ஊரில் கபடி போட்டி நடைபெற இருக்கிறது என அந்த ஊரை சேர்ந்த SRS travels உரிமையாளர் சரவணன் கூறுகிறார்.
மேலும் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு முதல் பரிசாக ரூபாய் 40,000, இரண்டாம் பரிசாக ரூபாய் 30,000, மூன்றாம் பரிசாக ரூபாய் 20,000 மற்றும் நான்காம் பரிசாக ரூபாய் 10,000 வழங்கப்பட இருக்கிறது .
பங்கேற்கும் அணிகளின் போக்குவரத்து செலவும் தங்குவதற்கான இடமும் உணவும் விழாக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அணிகள் பங்கேற்க இருப்பதால் போட்டியை காண ஆர்வமுடன் மக்கள் இருக்கிறார்கள்.
போட்டியை செவன் பிரதர்ஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்துகிறார்கள். போட்டிக்கான முன்னேற்பாடுகளை முன்னாள் மாவட்ட உடற்கல்வி அலுவலர் சோமு அவர்களும், தொழிலதிபர் கணேசன் அவர்களும் செய்து கொண்டு இருக்கிறார்கள்