ஐபிஎல் 2023: மும்பை 5.. சென்னை 4.. நாங்கள் 8 முறை… கோலி சொன்ன நச் பதில்..!
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூரு அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த 171 ரன்களை குவித்தது. இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி – கேப்டன் டூப்ளசிஸ் களத்தில் இறங்கி மும்பை பந்துவீச்சை சிதறடித்தனர்.
சிறப்பாக விளையாடிய விராட் கோலி 49 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்சருடன் 89ரன்கள் எடுக்க பெங்களூரு அணி 16.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 22 பந்துகளை மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்டியது. பின்னர் போட்டி முடிந்து பேசிய விராட் கோலி, மும்பை அணியுடனான போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. நெட் ரேன் ரேட் பயனளிக்கும் என்பதால் பந்துகள் மீதம் இருந்த நிலையில் வெற்றி பெற விரும்பியதாக கூறினார்.
மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருக்கைகள் அனைத்தும் நிரம்பியது முக்கியமானது என்றார். பெங்களூரு அணி குறித்த கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி மும்பை இந்தியன்ஸ் 5 முறை சாம்பியன் பட்டம் வாங்கியுள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறை பட்டத்தை வென்றுள்ளது. ஆனால் நாங்கள் பிளேஆஃப்களுக்கு அதிக முறை எட்டு முறை தகுதி பெற்ற மூன்றாவது அணி நாங்கள்தான் என்றார்.
ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தை எடுத்து, நாங்கள் இருக்கும் ஒரு சமநிலையான பக்கமாக இருக்க முயற்சி செய்யுங்கள், நாங்கள் இன்றிரவு செய்தது போல் எங்கள் திட்டங்களைச் செயல்படுத்துவோம் என கோலி கூறினார்.