” நாங்க ஆர்சிபி குடும்பம்” விராட் கோலியை தூக்கிய டூ பிளஸிஸ்.. ஒரே குரலில் வீரர்கள் பாடிய அந்த பாடல்!
" நாங்க ஆர்சிபி குடும்பம்" விராட் கோலியை தூக்கிய டூ பிளஸிஸ்.. ஒரே குரலில் வீரர்கள் பாடிய அந்த பாடல்!
பெங்களூரு: மும்பை அணியை வீழ்த்திய பின் பெங்களூரு அணியின் ஓய்வறையில் ஆர்சிபி வீரர்களின் கொண்டாட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15ஆண்டுகளாக கோப்பையை வெல்லவில்லை என்றாலும், சென்னை அணிக்கு இணையான ரசிகர்களை கொண்டு அணியாக ஆர்சிபி வலம் வந்துகொண்டிருக்கிறது. கிரிக்கெட்டில் வெற்றி, தோல்விகள் வந்துபோகும். ஆனால் ரசிகர்கள் என்றும் நிரந்திரன் என்று பழமொழிக்கு ஆர்சிபி அணி சிறந்த உதாரணம்.
ஆர்சிபி அணிக்காக ஆடும் ஒவ்வொரு வீரர்கள், அந்த அணியையும் வீரர்களையும் குடும்பமாகவே பார்ப்பார்கள். அதேபோல் ஆர்சிபி அணியை பிராண்ட் செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆர்சிபி நிர்வாகமும் புதிய யுக்திகளை செய்து வருகிறது.
16வது ஐபிஎல் சீசனில் நேற்று பெங்களூரு – மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் ஆர்சிபி அணி 172 ரன்கள் இலக்கை 16.2 ஓவர்களில் சேஸ் செய்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆர்சிபி அணியின் இயக்குநராக மைக் ஹெசன் பொறுப்பேற்றதில் இருந்து ஆர்சிபி அணி தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.