அபாரமாக விளையாடிய சுப்மன் கில்லை குறை கூறிய ஹர்திக் பாண்டியா.. இதுக்கு மேல என்ன செய்யனுமா?

அபாரமாக விளையாடிய சுப்மன் கில்லை குறை கூறிய ஹர்திக் பாண்டியா.. இதுக்கு மேல என்ன செய்யனுமா?

அகமதாபாத் : ஐபிஎல் 16வது சீசனில் நடப்புச் சாம்பியன் குஜராத் அணி தங்களது முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் சுப்மன் கில் 36 பந்துகளை எதிர்கொண்டு 63 ரன்கள் சேர்த்தார்.


இதில் மூன்று சிக்ஸர்களும் ஆறு பவுண்டர்களும் அடங்கும். இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்த வெற்றி மகிழ்ச்சியை கொடுப்பதாக கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் இதுபோன்ற ஆட்டத்தில் எங்களை நாங்களே கடினமான சூழ்நிலைகளில் தள்ளிக் கொண்டு உள்ளோம்.


ஆனால் ராகுல் தேவாதியா மற்றும் ரஷித் கான் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு எங்களுக்கு வெற்றி தேடி கொடுத்து இருக்கிறார்கள். முதல் இன்னிங்ஸ் முடிந்த உடனே நான் மகிழ்ச்சியாக தான் இருந்தேன். ஏனென்றால் ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி 200 ரன்கள் அடித்து விட கூடிய சூழ்நிலையில் இருந்தார்கள். ஆனால் நாங்கள் முக்கியமான கட்டத்தில் இரண்டு விக்கெட் வீழ்த்தி ஆட்டத்தை எங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தோம்.


இம்பாக்ட் பிளேயர் விதி என்னுடைய பணியை கடினமாக மாற்றிவிட்டது. நிறைய வீரர்கள் இருப்பதால் யாரை தேர்வு செய்வது என்று தெரியவில்லை


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *