10 தமிழக மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை, சென்னையில் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் வட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் ஐஎம்டி கணித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஜூன் 20 செவ்வாய்கிழமை, தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மதியம் 1 மணி நிலவரப்படி, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேலும், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் லேசானது முதல் மிதமானது வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. IMD இன் படி, நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 27 °C ஆக இருக்கும், அதே நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 33 °C முதல் 35 °C வரை இருக்கும்.
ஜூன் 19 அன்று, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கணிசமான மழை பெய்துள்ளதாக IMD தெரிவித்துள்ளது. குன்றத்தூர், மதுராந்தகம், தரமணி ஏஆர்ஜி பகுதிகளில் அதிகபட்சமாக 8 செ.மீ., மழையும், ஸ்ரீபெரும்புதூர், சிதம்பரம் ஏ.டபிள்யூ.எஸ்., அண்ணாமலை நகர், மின்னல், அயனாவரம் தாலுகா அலுவலகம், சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
மேலும், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் வட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என ஐஎம்டி கணித்துள்ளது.