அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி – அதிர்ச்சியில் நோயாளிகள்
அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி - அதிர்ச்சியில் நோயாளிகள்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 7 வயது சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி
திருப்பத்துார் நாட்றம்பள்ளி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் 7 வயது சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி இருந்ததால் சிறுமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதனை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தின் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
சிறுமி மாத்திரையை உடைத்து சாப்பிட்டதால் கம்பி இருந்தது தெரியவந்தது. ஒருவேளை சிறுமி மாத்திரையை உடைக்காமல் சாப்பிட்டு இருந்தால் அவரது நிலைமை மோசமாயிருக்கும்.
சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி இருந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post Views: 69