புதுமாப்பிள்ளை யூடியூபர் இர்பானை அழைத்து விருந்து கொடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி வைரலாகும் வீடியோ!!
பிரபல யூடியூபர்
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற யூடியூபராக திகழ்ந்து வருபவர் இர்பான்.
இவர் இர்பான்ஸ் வியூ என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார், அதில் இவருக்கு சுமார் 35 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
இவர் இந்த யூடியூப் சேனனில் புட் விலாக் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் சம்பாதித்து வருகிறார்.
இவருக்கு சமீபத்தில் திருமணம் ஆனது, இவரது திருமணத்திற்கு பல பிரபலங்கள் சென்று கலந்துகொண்டனர்.
ஆனால் பிசியாக இருந்ததன் காரணமாக அவரால் இவரது திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனது.
விருந்து
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியும் இர்பானின் ரசிகர் என்பதால் அவரை திருமணம் முடிந்த கையோடு தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்துள்ளார்.
மேலும், ஆளுநரின் அழைப்பை ஏற்று இர்பான், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வந்து ஆளுநரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடிவிட்டு சென்றுள்ளனர்.
அப்போது எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.