ஷாக்! ஒரே வாரத்தில் இரட்டிப்பான கேஸ்கள்.. 800ஐ கடந்த தினசரி கொரோனா! எந்த மாநிலங்களில் பாதிப்பு மோசம்

ஷாக்! ஒரே வாரத்தில் இரட்டிப்பான கேஸ்கள்.. 800ஐ கடந்த தினசரி கொரோனா! எந்த மாநிலங்களில் பாதிப்பு மோசம்

டெல்லி: இந்தியாவில் கடந்த சில காலமாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்று சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக வைரஸ் பாதிப்பு 800-ஐ கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 3 அலைகள் ஏற்பட்டன. ஒவ்வொரு சமயமும் கொரோனா பாதிப்பு உச்சம் தொடும் போது ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கொரோனா வேக்சின் உள்ளிட்ட கட்டுப்பாடு பணிகளால் வைரஸ் பாதிப்பு மெல்லக் கட்டுக்குள் வந்தது. இதனால் இப்போது கொரோனா அலை ஏற்பட்டால் மீண்டும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர்.

கொரோனா பாதிப்பு இதனிடையே இப்போது இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. சுமார் 3.5 மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவில் முதல்முறையாகக் கடந்த 10ஆம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு 400ஐ கடந்தது. இப்போது வெறும் 8 நாட்களில் வைரஸ் பாதிப்பு இரட்டிப்பாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 800க்கும் மேற்பட்ட கேஸ்கள் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், ஆக்டிவே கேஸ்களின் எண்ணிக்கையும் 5,389 ஆக உயர்ந்துள்ளது.

எங்கு அதிகம் இந்தியாவில் இதுவரை 4.46 கோடி பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஜார்கண்ட், மகாராஷ்டிராவில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், கேரளாவில் இரண்டு பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இப்போது கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நமது நாட்டில் கடந்த ஒரே மாதத்தில் வைரஸ் பாதிப்பு 6 மடங்கு அதிகரித்துள்ளது.

 6 மடங்கு உயர்வு கடந்த மாதம் 18ஆம் தேதி இந்தியாவில் தினசரி கொரோனா கேஸ்கள் 112 ஆக இருந்தது. இதனிடையே இப்போது சராசரி கேஸ்களின் எண்ணிக்கை 6 மடங்கு அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 0.01 சதவீதம் ஆக்டிவ் கேஸ்களாக உள்ளது. அதேபோல கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.80 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 4,41,58,161 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அதேபோல நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.

வேக்சின் பணிகள் இந்தியாவில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் குறைய வேக்சின் பணிகளே முக்கிய காரணமாக இருக்கிறது. இந்தியாவில் இதுவரை 220.64 கோடி டோஸ் வேக்சின்கள் போடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஆறு மாநிலங்களுக்கு எழுதியுள்ளது. கடந்த புதன்கிழமை மத்திய சுகாதார செயலாளர் மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்குக் கடிதம் எழுதினார். கொரோனா டெஸ்டிங், சிகிச்சை, கண்காணிப்பு, வேக்சின் பணிகளைத் துரிதமாகச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். 5 5

மத்திய அரசு கடிதம் மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில், “குறிப்பிட்ட மாநிலங்களில் அதிக அளவில் வைரஸ் பாதிப்பு ஏற்படுவது. இது கொரோனா சமூக பரவலாகப் பரவுவதைக் காட்டுகிறது. எனவே, கொரோனா தடுக்கவும் கட்டுப்படுத்தவும் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. கொரோனா பாதிப்பிற்கு எதிராக நாம் பெற்ற வெற்றியை இழக்காமல் இருக்க இது அவசியமாகும். கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இது ஒரு முக்கியமான பிரச்சினை. இந்த விவகாரத்தை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்” என்றார்.