ஒரு லட்சம் டிக்கெட் விற்பனை… முதல் நாள் வசூல் ரூ 50 கோடி : ஆதிபுருஷ் பிரபாஸ்க்கு வெற்றி தருமா?

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ஆதிபுருஷ் படம், ராமாயணத்தை அடிப்படையாக கொண்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இந்திய சினிமாவில் சமீப காலமாக பெரிய பட்ஜெட் படங்கள் பெரும் தோல்வியை சந்தித்து வருவது தொடர்ந்து வருகிறது. இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பாலிவுட்டில் வெளியான ஷாருக்கானின் ஜீரோ, சல்மான் கானின் டியூப்லைட், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் பிரம்மாஸ்திரா உள்ளிட்ட படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றிய படங்களாக பார்க்கப்படுகிறது.

இந்த படங்கள் அனைத்தும் லாபம் தரும், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் சுவாரஸ்யமான கதையாகவும், ரசிகர்களின் இதயத்திற்கு நெருக்கமான ஒரு டைட்டிலாக இருந்தாலும் பாக்ஸ்ஆபீஸ் வசூல் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

ஆனால் இந்த வரிசையில் இருந்து ஆதிபுருஷ் திரைப்படம் மாற்றமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன். சையப் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ராமாயணத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ஆதிபுருஷ் படம், ராமாயணத்தை அடிப்படையாக கொண்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர். வரும் ஜூன் 16-ந் தேதி வெளியாக உள்ள ஆதிபுருஷ் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படம் குறித்து திரைப்பட வர்த்தக நிபுணரான தரண் ஆதர்ஷ் கூறுகையில், ராமாயணத்தின் மீதான ஈர்ப்பு காரணமாக, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராமாணனத்தை மக்கள் குடும்பத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். அதேபோல், ராமாயணத்தின் மீதான ஈர்ப்பின் காரணமாக ஆதிபுருஷ் படத்தையும் மக்கள் வரவேற்று ஆதரவளிப்பார்கள் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த படத்தில் மிக முக்கியமான விஷயம் பிரபாஸ், கிருத்தி சனோன் அல்லது சைஃப் அலி கான் அல்ல. என்னைப் பொறுத்தவரை, இது ராமாயணம், இது மிகவும் வலுவான உணர்ச்சி மிக்க ஒரு கதை. மற்ற அனைத்தும் இரண்டாம் பட்சம் தான். அதே நேரத்தில் படத்தைப் பார்க்கும் பல இந்தியர்கள் அவரது உணர்ச்சியுடன் எதிரொலிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே ஆதிபுருஷ் படத்தின் முன்பதிவு (ஜூன் 11) ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. அப்போதிருந்து, பதிவாகியுள்ள முன்பதிவு ஷாருக்கானின் பதான் படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய முன்பதிவு சாதனையை முறியடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், படத்திற்கு பெரிய எண்ணிக்கையிலான டிக்கெட்டுகளை விற்றாலும், அது ஷாருக்கானின் பதானுக்கு இணையாக இல்லை என்றும் “விற்ற டிக்கெட்டுகளின் எண்ணிக்கை இன்னும் அறியப்படவில்லை இந்த நேரத்தில், இது ஒரு நல்ல தொடக்கத்தை பெறுவது போல் தெரிகிறது.

படத்தின் பெரும்பாலான டிக்கெட்டுகள் ஏற்கனவே பிரபலங்களால் வாங்கப்பட்டுள்ளன. ரன்பீர் கபூர், தி காஷ்மீர் ஃபைல்ஸ் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் மற்றும் அனன்யா பிர்லா ஆகியோர் சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு விநியோகிக்க தலா 10,000 டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். இதை மற்ற பிரபலங்களும் பின்பற்றி வருகின்றனர்.

ராமாயணத்தை டிவியில் பார்த்த தலைமுறையினர் ஆதிபுருஷ் படத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று. திரைப்பட தயாரிப்பாளரும் வர்த்தக ஆய்வாளருமான கிரிஷ் ஜோஹர், கூறியுள்ளார். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஹிந்து தொன்மங்களைப் பற்றிக் கற்பிப்பதற்காக அவர்களை தியேட்டருக்கு அதிபுருஷ் திரைப்படத்தை பார்க்க அழைத்துச் செல்வார்கள் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

திரைப்பட வர்த்தக ஆய்வாளர் ஜோஹர் கூறுகையில், “நீண்ட காலமாக ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எந்த திரைப்டமும் வரவில்லை என்பதால் மக்கள் தங்கள் குழந்தைகளை படத்திற்கு அழைத்துச் செல்வார்கள். முன்பு, நாங்கள் ஒரு கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தோம், அங்கு தாத்தா பாட்டி கதை சொன்னார்கள். 

ஆனால் இப்போது எல்லோரும் ஒரு தனி குடும்பத்தில் உள்ளனர், மேலும் ஒவ்வொரு பெற்றோரும் கதை சொல்வதன் முக்கியத்துவத்தை உணர்கிறார்கள். எனவே, அவர்கள் பொழுதுபோக்கிற்காக மட்டும் செல்லாமல், தங்கள் குழந்தைகளிடம் புராண விஷயங்களை புகுத்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு முறையாவது அழைத்துச் செல்வார்கள் என்று நான் நம்புகிறேன், இது படத்திற்கு பெரிய உந்துதலைக் கொடுக்கும்.

ஆதிபுருஷ் அனைத்து மொழிகளிலும் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்யும். “இது ஒரு உண்மையான பான்-இந்தியா படம், அங்கு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வடநாட்டைச் சேர்ந்தவர்கள், ஆனால் அவர்கள் தென்னிந்தியாவின் பெரிய முன்னணி நடிகரை படத்தின் நாயகனாக வைத்துள்ளனர். பிரபாஸுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் படத்தின் ஹிந்திப் பதிப்பு எங்கும் ரூ 15-18 கோடி வரை ஓப்பனிங் வசூல் செய்யும் என எதிர்பார்க்கிறேன்.

 இந்தப் படம் எல்லா மொழிகளிலும் பெரிய ஓப்பனிங் பெற்ற முதல் பத்து படங்களில் ஒன்றாக இடம்பெறும். எல்லா மொழிகளிலும் நிச்சயம் ரூ 50 கோடியைத் தொடும்” என்று அவர் கணித்துள்ளார்.

தேசிய சினிமா சங்கிலியான பிவிஆர் ஏற்கனவே ஒரு லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்றுள்ளது, அதில் 25 சதவீதம் தென் மாநிலங்களில் விற்கப்பட்டுள்ளது. இதனால் 5 மொழிகளில் வெளியாகும் ஆதிபுருஷ் திரைப்படத்திற்கான முன்பதிவுகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. நாங்கள் ஏற்கனவே 1 லட்சத்துக்கும் அதிகமான முன்பதிவுகளைத் தாண்டிவிட்டோம், ஜோஹர் குறிப்பிட்டது போல், சந்தேகத்திற்கு இடமின்றி பிரபாஸுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் பாக்ஸ் ஆபிஸில் அவரது கடைசி இரண்டு படங்களின் மோசமான ரிசல்ட் பெற்றது.

இதில் 2022ல் வெளியான ராதே ஷ்யாம் ரூ.19.30 கோடி வியாபாரம் செய்தது. சாஹோ (2019) ரூ 142.95 கோடி சம்பாதித்ததால் டிக்கெட் கவுன்டர்களில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்திவில்லை. இந்த படம் 350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால், ஆதிபுருஷ் படத்திற்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைப்பது அவருக்கு முக்கியமானது.

“ஆதிபுருஷ் பெரிய வெற்றியை பெறுவது பிரபாஸுக்கு மிகவும் முக்கியமானது, ஏனென்றால் சாஹோ உண்மையில் நன்றாக இல்லை. ஹிந்தி வட்டாரத்தில் அந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. இரண்டாவதாக, ராதே ஷ்யாம் ஒரு முழுமையான தோல்வியாக அமைந்தது. குறிப்பாக, பாகுபலி மற்றும் பாகுபலி 2 மூலம் உயரத்தைத் தொட்ட பிரபாஸ் அதே போன்று ஒரு வெற்றியை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார்.

அதே சமயம் நடிக்கும் ஒவ்வொரு படமும் அப்படி இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. சச்சின் டெண்டுல்கர் ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவருக்கு ஒரு பெரிய வெற்றி தேவை, உங்கள் படத்தின் பட்ஜெட் ரூ. 500 கோடியாக இருக்கும்போது படத்தின் வசூல் அதை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று தரண் ஆதர்ஷ் கூறியுள்ளார்.

பிரபாஸ் இந்தியில் இன்னும் பிரபலமாக வேண்டும் என்று கூறியுள்ள கிரிஷ் ஜோஹர் ஆதிபுரஷ் படத்தின் ராமர் கேரக்டர் மூலம் அவர் வட இந்தியாவின் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக வாய்ப்புள்ளது. அவர் நடிக்கும் கதாபாத்திரம் ஹிந்தி மண்டலத்திற்குள் அவரின் பெரிய வெற்றிக்கு உதவும். இது நடக்கவில்லை என்றால் நிச்சயமாக அவர் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து அதன்பிறகு கதைகளை தேர்வு செய்வது அவசியம். என்று கூறியுள்ளார்.

திரைப்பட வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா கூறுகையில், விநியோக உரிமை மூலம் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே 270 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர். இந்த படத்தின் OTT மற்றும் சாட்டிலைட் உரிமைகள் 210 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி, டிக்கெட் விற்பனை மூலம் எவ்வளவு சம்பாதிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *