சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து..20 பேர் படுகாயம்..கடும் போக்குவரத்து நெரிசல்.
சென்னை: பூந்தமல்லி அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளர்.
செம்பரப்பாக்கம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தால் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதில் தனியார் தொழிற்சாலைக்கு சென்று ஊழியர்களுடன் கொண்டிருந்த வாகனமும் மோதியது. இந்த விபத்தில் வேனில் இருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.
நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதின. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொழிற்சாலைகள் நிறைந்த ஸ்ரீபெரும்புதூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
காலை நேரம் என்பதால் அலுவலகத்திற்கு செல்பவர்கள் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.