ஆரம்ப வர்த்தகத்தில் சந்தைகள் சரிவு

அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் அமெரிக்க சந்தைகளின் பலவீனமான போக்குகளுக்கு மத்தியில் பங்கு பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வெள்ளிக்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் சரிந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 204.84 புள்ளிகள் சரிந்து 66,061.98 புள்ளிகளாக உள்ளது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 60.35 புள்ளிகள் சரிந்து 19,599.55 புள்ளிகளாக உள்ளது.

சென்செக்ஸ் பட்டியலில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், என்டிபிசி, ஹெச்டிஎப்சி வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகிய பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஐடிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின.

ஆசிய சந்தைகளில், சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் பச்சை நிறத்திலும், டோக்கியோ குறைந்த அளவிலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

அமெரிக்க சந்தைகள் வியாழக்கிழமை எதிர்மறையில் முடிந்தன.

சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.40 சதவீதம் குறைந்து 83.90 டாலராக வர்த்தகமாகி வருகிறது.

அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் வியாழக்கிழமை ரூ.3,979.44 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 440.38 புள்ளிகள் சரிந்து 66,266.82-ஆகவும், நிப்டி 118.40 புள்ளிகள் சரிந்து 19,659.90-ஆகவும் முடிந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *