கனரா வங்கியின் நிகர லாபம் 75 சதவீதம் உயர்வு
பெங்களூரைச் சேர்ந்த கனரா வங்கியின் நிகர லாபம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 75 சதவீதம் அதிகரித்து ரூ.3,535 கோடியாக உள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கியின் நிகர லாபம் ரூ.2,022 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த வருவாய் ரூ.23,352 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.29,828 கோடியானது என்று கனரா வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி ஈட்டிய வட்டி ரூ.18,177 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.25,004 கோடியானது.
நிகர வட்டி வருமானம் (என்ஐஐ) கடந்த ஜூன் காலாண்டில் 28 சதவீதம் அதிகரித்து ரூ.8,666 கோடியாக இருந்தது.
நிகர வட்டி மார்ஜின் (என்ஐஎம்) 2.78 சதவீதத்திலிருந்து 3.05 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கனரா வங்கியின் நிர்வாக இயக்குநர் கே.சத்யநாராயண ராஜு கூறுகையில், இந்த ஆண்டில் என்ஐஎம் 3 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.