பயாலஜி படித்தவர்களுக்கு ஏற்ற என்ஜினீயரிங் கோர்ஸஸ்; இதை எல்லாம் கவனிங்க!

பொறியியல் கோர்ஸ்களில் அரிய, அதேநேரம் நல்ல வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடிய படிப்புகள் பல உள்ளன. அவற்றில் பயாலஜி படித்தவர்களுக்கு கூடுதல் நன்மை அளிக்கக் கூடிய படிப்புகளும் உள்ளன. அவற்றை குறித்து இப்போது பார்ப்போம்.

பொறியியல் கோர்ஸ்களில் அரிய, அதேநேரம் நல்ல வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடிய படிப்புகள் பல உள்ளன. அவற்றில் பயாலஜி படித்தவர்களுக்கு கூடுதல் நன்மை அளிக்கக் கூடிய படிப்புகளும் உள்ளன. அவற்றை குறித்து இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டைப் போலவே மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இந்தநிலையில், 12 ஆம் வகுப்பில் பயாலஜி படித்தவர்களுக்கு ஏற்ற படிப்புகள் எவை? அண்ணா பல்கலைக்கழகம் தவிர பொறியியல் படிப்புகளை வழங்கும் தமிழக பல்கலைக்கழகங்கள் எவை என்பது குறித்து கல்வியாளர் ரமேஷ்பிரபா தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், பொறியியல் படிப்பவர்களில் கணிசமானவர்கள் 12 ஆம் வகுப்பில் உயிரியல் படித்த மாணவர்களாக இருப்பர். அதாவது கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் படித்தவர்களாக இருப்பர். 

பொறியியல் படிப்புகளில் சேர்க்கைப் பெற கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் படித்திருக்க வேண்டும் என்பது நிபந்தனை.

12 ஆம் வகுப்பில் பயாலஜி படித்த மாணவர்கள், பயாலஜி சார்ந்த படிக்க அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 கோர்ஸ்கள் உள்ளன.

1). Bio-technology

2). Bio Medical Engineering

3). Bio Informatics

4). Agriculture Engineering

5). Agriculture and Irrigation Engineering

6). Food Technology

7). Environmental Engineering

8). Industrial Bio-Technology

9). Medical Electronics Engineering

இந்த கோர்ஸ்களில் எல்லாம் பயாலஜி நேரடியாக தேவைப்படாது என்றாலும், பயாலஜி படித்தவர்களுக்கு கூடுதல் நன்மையை வழங்கக்கூடியவை.

அண்ணா பல்கலைக்கழகம் தவிர, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 4 வகையான பொறியியல் படிப்புகள் உள்ளன

1). B.Tech Agri. Engineering

2). B.Tech Food Technology

3). B.Tech Energy and Environmental Engineering

4). B.Tech Bio-Technology

இதில் Bio-Technology படிப்புக்கு கண்டிப்பாக பயாலஜி படித்திருக்க வேண்டும்.

அடுத்ததாக, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 3 வகையான பொறியியல் படிப்புகள் உள்ளன.

1). B.Tech Food Technology

2). B.Tech Diary Technology

3). B.Tech Poultry Technology

அடுத்ததாக, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 3 வகையான பொறியியல் படிப்புகள் உள்ளன.

1). B.Tech Fisheries Engineering

2). B.Tech Energy and Environmental Engineering

3). B.Tech Fisheries and Nautical Technology

இவற்றில் பெரும்பாலான படிப்புகள் பெரிதாக அறியப்படாதவை. மேலும் ஆராய்ச்சி சார்ந்தவை, எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடியவை. மேலும் சுயதொழில் தொடங்க வாய்ப்புள்ளவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *