போபால் – டெல்லி இடையே 11வது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. குறைகிறது பயண நேரம்
போபால் - டெல்லி இடையே 11வது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. குறைகிறது பயண நேரம்
போபால்: நாட்டின் 11வது வந்தே பாரத் ரயிலை மத்திய பிரதேசத்தின் போபாலிருந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடக்கி வைக்கிறார். இந்த ரயில் டெல்லி வரை இயக்கப்படுகிறது.
சாதாப்தி ரயிலுக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘வந்தே பாரத்’ எதிர்பார்த்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ரயில் சேவை உருவாக்கப்பட்ட பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக நவீனமயமாக்கப்பட்டது. அப்படி வந்ததுதான் சதாப்தி. சதாப்தி ரயில்கள் நாட்டின் அதிவேகமான ரயில்களில் ஒன்றாகும். இது அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ. இருப்பினும் சராசரியாக 85-93 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
கண்மூடித்தனமாக எடப்பாடியை எதிர்க்கிறேனா? - ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்
இந்நிலையில் தற்போது போபால் டூ டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் இன்று முதல் தனது சேவையை தொடங்க இருக்கிறது. இந்த இரு நகரங்களுக்கும் இடையே மொத்தம் 706 கி.மீ தொலைவு இருக்கிறது. இந்த தொலைவை வந்தே பாரத் ரயில் 7.50 மணி நேரத்தில் கடந்து விடும். இந்த புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இது நாட்டின் 11வது வந்தே பாரத் ரயிலாகும். என்னதான் சதாப்தி ரயில் வேகமான ரயிலாக இருந்தாலும், போபாலிலிருந்து டெல்லி வந்து சேர 8 மணி நேரத்திற்கும் மேல் ஆகும். தற்போது மும்பையிலிருந்து டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மட்டுமே 7.55 மணி நேரத்தில் போபாலிலிருந்து டெல்லி வந்து சேர்கிறது.