நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் – எடப்பாடி பழனிசாமி
“நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல்…”அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்” – ஈபிஎஸ் பரபரப்பு பேச்சு
அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் சேலம் வருகை புரிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நெடுகிலும் ஏராளமான தொண்டர்கள் நின்று வரவேற்பு அளித்தனர் அவர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்றுக் கொண்டு பேசியதாவது.
திமுக ஆட்சி பொய்களையும் புரட்டுகளையும் மட்டுமே பேசி வருகிறது. எப்போது இந்த ஆட்சி போகும் என்ற ஏக்கத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரும் என புள்ளி வைத்து பேசினார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.