கள்ளழகர் கோவிலில் சமையலறை, பூங்காவை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
பக்தர்களின் சாமி தரிசனம் செய்யும் உரிமையை பாதிக்கும் பிரச்சினை இருந்தால், அதில் இந்து சமய அறநிலையத்துறை தலையிடும் என்று சித்பரம் தீட்சிதர் விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவை தீட்சிதர்கள் மீறியதால்தான் கோயில் விவகாரங்களில் நாங்கள் தலையிட வேண்டியிருந்தது. கோவில் விவகாரங்களில் வெளிப்படைத்தன்மையை கடைபிடித்து பக்தர்களுக்கு முறையாக சேவை செய்யுமாறு தீட்சிதர்களை கேட்டுக் கொள்கிறேன்.
மதுரை கள்ளழகர் கோயிலில் மறுவடிவமைக்கப்பட்ட சமையலறை மற்றும் பூங்கா வசதியை அமைச்சர் பி.மூர்த்தியுடன் தொடங்கி வைத்த பின்னர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல், பக்தர்களின் நலனுக்காக தமிழகத்தில் பல்வேறு கோயில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை அழகர்கோவிலில் விரைவில் அன்னதான திட்டம் தொடங்க உள்ளது. மேலும், ராஜ கோபுர பணிகள் ஒரு மாதத்தில் நிறைவடையும்.
அடுத்த இரண்டு மாதங்களில் கள்ளழகர் கோயிலிலும் கும்பாபிஷேகம் நடத்தப்படும்” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கள்ளழகர் கோயில் அருகே சாலை அமைப்பது தொடர்பான சர்ச்சை குறித்து கேட்டபோது, “உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மத நடவடிக்கைகள் தொடர்பான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு உரிமை உள்ளது.
வனத்துறை அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சாலை அமைக்க அனுமதி கோரி, இந்து சமய அறநிலையத்துறை விண்ணப்பித்துள்ளது. ஒப்புதல் கிடைத்த பிறகு, வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை பணிகள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.