சென்னை ஓட்டல் ஊழியர் லிப்டில் கால் சிக்கி பலியானார்.
சென்னை: சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் சர்வீஸ் லிப்ட்டுக்கு வெளியே கால் சிக்கியதில் 24 வயது ஹவுஸ்கீப்பிங் ஊழியர் உடல் நசுங்கி பலியானார்.
பெரம்பூர் ஹைதர் கார்டன் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கே.அபிஷேக். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நகரின் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹோட்டலின் ஒன்பதாவது மாடியில் தனது வேலையை முடித்துவிட்டு, தள்ளுவண்டியுடன் லிப்டில் நுழைந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அவர் லிப்டில் நுழைந்து 8 வது மாடியை அடைய பொத்தானை அழுத்தியதாகவும், தள்ளுவண்டி லிப்டின் கதவுகளில் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மதியம் 2.30 மணியளவில் தள்ளுவண்டியுடன் 9-வது மாடியில் உள்ள லிப்டில் நுழைந்தார். அவர் 8 வது மாடிக்கான பொத்தானை அழுத்தினார், ஆனால் தள்ளுவண்டி கதவில் சிக்கியது, லிப்ட் நகரத் தொடங்கியதால் அபிஷேக் இடையில் சிக்கிக் கொண்டார். லிப்ட்டுக்கும் 8-வது மாடிக்கும் இடையே சிக்கி அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்” என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மயிலாப்பூர் தீயணைப்பு படையினர் மற்றும் எழும்பூர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் சடலத்தை மீட்டனர்.
பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அபிஷேக்கின் சகோதரர் அவினேஷ் குமார் அளித்த புகாரின் பேரில், 304 (ஏ) (ஐபிசி) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோகுல், தலைமை பொறியாளர் வினோத்குமார், ஓட்டல் இயக்க மேலாளர் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.