இரண்டு மாவட்டங்களில் நாளை ஆய்வு.. இன்று இரவே திருச்சி செல்லும் முதல்வர் மு.க ஸ்டாலின்.

திருச்சி: திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று இரவு முதல்வர் மு.க ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சி செல்கிறார்.

திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று இரவு திருச்சி செல்கிறார். தூர்வாரும் பணிகளை நாளை ஆய்வு செய்ய உள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தஞ்சாவூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

இதற்காக இன்று இரவு 9.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளோம்.

பின்னர் முதல்வர் மு.க ஸ்டாலின் தஞ்சைக்கு செல்கிறார். வெள்ளிக்கிழமை காலை தஞ்சை மாவட்டத்தில் 3 இடங்களில் தூர்வாரும் பணியை அவர் பார்வையிடுகிறார். அதன் பின்னர் பூண்டி பாலம் வழியாக வரும் முதல்வர் கூழையாற்றில் தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார்.

பின்னர் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி மெயின் ரோட்டில் நந்தியாற்றில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்துவிட்டு திருச்சி திரும்புகிறார். அதன்பிறகு திருச்சியில் இருந்து பிற்பகல் 2.30 மணி அளவில் விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்” என்றார்.

முதல்வர் மு.க ஸ்டாலின் திருச்சி வருகை தர உள்ளதை ஒட்டி அவரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளை திமுகவினர் செய்துள்ளர். முதல்வர் வருகை தர உள்ளதை ஒட்டி திருச்சி மற்றும் தஞ்சையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *