தி.மு.க.வில் இணையப்போவதாக வெளியான தகவலை, ம.தி.மு.க. எம்.பி. ஈரோடு கணேசமூர்த்தி மறுத்துள்ளார்.
ம.தி.மு.க. பொருளாளராக உள்ள ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது.
ம.தி.மு.க நிர்வாகிகள் தேர்தல் ஜுன் 1ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பொருளாளர் பதவி பறிக்கப்படக்கூடும் என்பதால், கணேசமூர்த்தி தி.மு.க.வுக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், எந்த காரணத்திற்காகவும் ம.தி.மு.க-விலிருந்து தான் விலகப்போவதில்லை என்றும், எந்த மாற்று கட்சியிலும் இணையப்போவதில்லை என்றும் யார் எந்த செய்தி பரப்பினாலும் தனக்கு கவலை இல்லை என்றும் கணேசமூர்த்தி எம்பி தெரிவித்துள்ளார்.