சமந்தாவின் மாஜி கணவருடன் காதலா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா
நடிகை சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்த நடிகர் நாகசைதன்யாவை, பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா துலிபாலா காதலிப்பதாக வதந்தி பரவி வந்தது.காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தாவும், நாக சைதன்யாவும் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். சமந்தாவை விவாகரத்து செய்த பின்னர் நடிகர் நாக சைதன்யா தொடர்ந்து காதல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில், அவர் பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா துலிபாலா உடன் டேட்டிங் செய்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.
இதனை உறுதி செய்யும் விதமாக சோபிதாவும், நாக சைதன்யாவும் லண்டனில் ஜோடியாக சுற்றிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இருப்பினும் இந்த காதல் சர்ச்சை குறித்து நாக சைதன்யாவும், சோபிதாவும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வந்தனர். அவர்கள் அமைதியாக இருந்தாலும், அவர்களைப் பற்றிய காதல் சர்ச்சை தொடர்ந்து காட்டுத்தீ போல் பரவி வந்தன. இதனால் வேறுவழியின்றி முதன்முறையாக காதல் சர்ச்சை குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார் சோபிதா.