ஒரேயொரு நோபால் ஆட்டத்தையே தலைகீழே மாற்றிடுச்சு – வருத்தமாக பேசிய சஞ்சு சாம்சன்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்துள்ளது.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கோட்டை என்று சொல்லக் கூடிய ஜெய்ப்பூரில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 52ஆவது ஐபிஎல் போட்டியில் மோதின. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. இதில், யஷஸ்வி ஜெய்ஷ்வால் 33, ஜோஸ் பட்லர் 95 ரன்களில் ஆட்டமிழந்தனர். சஞ்சு சாம்சன் 66 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

சஹா பேட்டிங்கை பார்த்து வியந்த விராட் கோலி – வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

இதையடுத்து கடின இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தொடக்க வீரர்கள் அன்மோல்ப்ரித் சிங், அபிஷேக் சர்மா இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இதில், அன்மோல்ப்ரித் சிங் 33 ரன்களில் வெளியேறினார். அபிஷேக் சர்மா 55 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் த்ரிபாதி 47 ரன்களில் வெளியேற, ஹென்ரிச் கிளாசன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். கடைசியாக 6 பந்தில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அப்துல் சமாத் மற்றும் மார்கோ ஜான்சன் இருவரும் களத்தில் இருந்தனர்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வி – சுழற்பந்தை சமாளிக்க 3ஆவதாக களமிறங்கினேன் – ரோகித் சர்மா விளக்கம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஹீரோ என்று சொல்லக் கூடிய சந்தீப் சர்மா கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தார் சமாத். அதே போன்று 2ஆவது பந்தில் சிக்ஸர், 3ஆவது பந்தில் 2 ரன்கள், 4ஆவது பந்தில் ஒரு ரன்கள் எடுக்கப்பட்டது. 5ஆவது பந்தில் ஜான்சன் ஒரு ரன்கள் எடுத்தார். 5 பந்துகளில் 12 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசியாக ஒரு பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி பந்தில் அப்துல் சமாத் கேட்சான நிலையில் அது நோபாலாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலமாக கிடைத்த ப்ரீஹிட் வாய்ப்பை பயன்படுத்தி அப்துல் சமாத் சிக்ஸர் அடித்து ஒரே பந்தில் ஹீரோவான நிலை ஏற்பட்டது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

போட்டினா சண்டை; அப்புறம் சமாதானம்; வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிராஜ் – சால்ட்; நல்ல வேல ஃபைன் இல்ல!

இதன் மூலமாக ஆர்ஆர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆர்.ஆர். அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்திருக்கும். தற்போது 11 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்று 4ஆவது இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு 4ஆவது இடம் பிடிக்கும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. 3 அணிகளும் 10 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 4ஆவது இடத்திற்கு வருவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், 3 அணிகளுமே ஜெயித்தால் ரன் ரேட் அடிப்படையில் 4ஆவது இடம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலியின் ஆக்ரோஷத்தை அடக்கிய டெல்லி: ஒரு வழியா கை கொடுத்து சமாதானமான விராட் கோலி – கங்குலி!

இந்த நிலையில், தோல்விக்குப் பிறகு பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியிருப்பதாவது: இது போன்ற போட்டிகளால் தான் ஐபிஎல் தொடர் மிகவும் ஸ்பெஷலாக மாறுகிறது. சந்தீப் சர்மா மீது அதிக நம்பிக்கையில் இருந்தேன். நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள் என்று அறிவிக்கப்படும் வரையில் உங்களால் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று நினைக்கவே முடியாது. சென்னைக்கு எதிரான போட்டியில் சந்தீப் சர்மா தான் கடைசி நேரத்தில் வெற்றி தேடிக் கொடுத்தார். ஆனால், அவர் வீசிய நோபால் கடைசி நேரத்தில் எங்களது வெற்றியை பறித்து சென்றுவிட்டது. ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது எளிதான காரியம் எல்லாம் கிடையாது.

Athletics: 5000 மீட்டர் தடகளப் போட்டியில் அவினாஷ் சபில், பருல் சவுத்ரி புதிய சாதனை!

ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு போட்டியும் புது புது அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும். அடுத்து வரும் போட்டியிலாவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். தொடர்ந்து தோல்வி அடைந்து வருவது ஏமாற்றம் அளிக்கிறது. முதல் 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ், கடைசியாக நடந்த 6 போட்டிகளில் வரிசையாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *