நாட்டில் 651 அத்தியாவசிய மருந்துகளின் விலை 7 சதவீதம் வரை சரிவு….
நாட்டில் 651 அத்தியாவசிய மருந்துகளின் விலை 7 சதவீதம் வரை சரிவு.
இந்திய மக்களுக்கு வருடம் முழுவதும் மருத்துவ உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் வேளையில், மத்திய அரசு நாட்டு மக்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் மருத்துகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக 800க்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துகளை தனி பட்டியலில் சேர்த்துள்ளது.
இந்த பட்டியலில் இருக்கும் மருத்துகளின் விலையை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு மத்தியில் சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து இதன் விலையை NPPA அமைப்பு நிர்ணயம் செய்கிறது.
இந்த நிலையில் 651 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் மாதத்திலிருந்து சராசரியாக 6.73 சதவீதம் குறைந்துள்ளது.
அத்தியாவசிய மருந்துகள் அத்தியாவசிய மருந்துகள் அடங்கிய பட்டியலில் இருக்கும் பெரும்பாலான மருந்துகளின் உச்சவரம்பு விலையை அரசு நிர்ணயித்துள்ளது என்று NPPA திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. தேசிய மருந்து விலைக் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட ஒரு ட்வீட்டில், தேசிய அத்தியாவசிய மருந்துகளின் (NLEM) கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மொத்த 870 மருந்துகளில் 651 மருந்துகளின் உச்சவரம்பு விலையை நிர்ணயம் செய்யும் பணிகள் முடிந்துள்ளது.
அத்தியாவசிய மருந்துகள் அத்தியாவசிய மருந்துகள் அடங்கிய பட்டியலில் இருக்கும் பெரும்பாலான மருந்துகளின் உச்சவரம்பு விலையை அரசு நிர்ணயித்துள்ளது என்று NPPA திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. தேசிய மருந்து விலைக் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட ஒரு ட்வீட்டில், தேசிய அத்தியாவசிய மருந்துகளின் (NLEM) கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மொத்த 870 மருந்துகளில் 651 மருந்துகளின் உச்சவரம்பு விலையை நிர்ணயம் செய்யும் பணிகள் முடிந்துள்ளது.
சுகாதார அமைச்சகம் சுகாதார அமைச்சகம் செப்டம்பர் 2022 இல் NLEM பட்டியலில் இருக்கும் மருந்துகளை திருத்தியது, இதன் மூலம் இப்போது இப்பட்டியலில் மொத்தம் 870 மருந்துகளைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) இப்பட்டியிலில் இருக்கும் மருந்துகளின் உச்சவரம்பு விலையை நிர்ணயித்ததன் மூலம், சராசரியாக 651 அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகப்படியாக 16.62 சதவீதம் குறைந்துள்ளது
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) மார்ச் 25 ஆம் தேதி 2022 காலண்டர் ஆண்டுக்கான WPI அளவு 12.12% என மாற்றியது. கடந்த ஆண்டு NPPA அமைப்பு 10.7 சதவீதமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் NPPA அமைப்பு மொத்த விலை குறியீடு அடிப்படையில் அளவீட்டை அறிவிக்கும்.
NLEM பட்டியல் இந்த வகையில் நடப்பு ஆண்டில் NLEM பட்டியலில் இருக்கும் 870 மருந்துகளின் விலை 12.12 சதவீதம் உயர வேண்டிய நிலையில் 651 அத்தியாவசிய மருந்துகளின் விலை, ஏப்ரல் 1 முதல் உண்மையில் 6.73 சதவீதம் குறைந்துள்ளது இது மக்களுக்கு நன்மை பயக்கும் என என்பிபிஏ தெரிவித்துள்ளது
CPI, WPI விளக்கம் இந்தியாவில் பணவீக்கத்தை CPI, WPI என இரண்டு காரணிகளில் கணக்கிடப்படுகிறது. இதில் CPI எனப்படும் நுகர்வோர் பணிவீக்கம் மக்கள் மத்தியில் ஏற்படும் விலை மாற்றத்தை கணக்கிடும், WPI எனப்படும் மொத்த விலை பணவீக்கம் உற்பத்தியாளர் மத்தியில் ஏற்படும் விலை மாற்றத்தை கணக்கிடும்.
விலை சரிவு இந்த நிலையில் மருந்து உற்பத்தியில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) மார்ச் 25 ஆம் தேதி 2022 காலண்டர் ஆண்டுக்கான மொத்த விலை பணவீக்கத்தின் அளவு 12.12% என மாற்றியது. ஆனாலும் 651 மருந்துகளின் உச்சவரம்பு விலையை சராசரியாக 6.73 சதவீதம் குறைந்துள்ளது. இதன் மூலம் மீதமுள்ள மருந்துகளின் விலை உயர உள்ளது.