தலைக்கவசம் அணிந்து வரும் பெண்களுக்கு 1 லிட்டர் பெட்ரோலை இலவசமாக வழங்கிய தஞ்சாவூர் போக்குவரத்து போலீஸ்!
தஞ்சாவூர் போக்குவரத்து போலீஸ், தலைக்கவசம் அணிந்து வரும் பெண்களுக்கு 1 லிட்டர் பெட்ரோலை இலவசமாக வழங்கி உள்ளனர்.
வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த தலைக்கவசத்தை அணிவது நாக்கு தான் பாதுகாப்பு என பலரும் புரிந்து கொள்வதில்லை. இதனால், தான் அலட்சியப்போக்காக ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டும் பலர் விபத்தில் சிக்குகின்றனர்.
சாலை போக்குவரத்து காவல் அதிகாரிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தி வருவதோடு, இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில், தஞ்சாவூர் போக்குவரத்து போலீஸ், தலைக்கவசம் அணிந்து வரும் பெண்களுக்கு 1 லிட்டர் பெட்ரோலை இலவசமாக வழங்கி அவர்களை ஊக்குவித்தனர்.