அரை நிர்வாணமாக பெண் சடலம்! ‘அவங்கதான்’ காரணமாம் சர்ச்சையை கிளப்பும் உறவினர்கள்.. கையை பிசையும் போலீஸ்
அரை நிர்வாணமாக பெண் சடலம்! 'அவங்கதான்' காரணமாம் சர்ச்சையை கிளப்பும் உறவினர்கள்.. கையை பிசையும் போலீஸ்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஆடு மேய்க்க சென்ற பெண் ஒருவர் உடைகள் கலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பெண்ணின் உறவினர்கள் வடமாநில தொழிலாளர்கள் மீது சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளைம் அருகே உள்ள காரப்பாளையத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் இதே பகுதியில் காலங்காலமாக வசித்து வரும் உள்ளூர் மக்களுக்கும் இடையே அடிக்கடி சிறு சிறு பஞ்சாயத்துக்கள் மேலெழுந்துள்ளன. இருப்பினும் பெரிய பிரச்னை ஏதும் வெடித்ததில்லை. இந்நிலையில் நேற்று ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது உள்ளூரை சேர்ந்த பெண் ஒருவர் ஆடு மேய்க்க அருகில் இருந்த காட்டுப்பகுதிக்கு சென்றிருக்கிறார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. வழக்கமாக காலை 7 மணியளவில் செல்லும் அவர், பிற்பகல் 3 மணிக்கெல்லாம் வீடு வந்துவிடுவார். நேற்று அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவருடைய கணவர் காட்டு பகுதிக்கு சென்று தேடி பார்த்திருக்கிறார். இவர்கள் வளர்த்த ஆடுகள் அனைத்தும் அங்கொன்றும், இங்கொன்றுமாக சுற்றித்திரிந்துக்கொண்டிருந்தன. தனது மனைவியின் பேரை சொல்லி கணவர் அழைத்திருக்கிறார். ஆனால் எந்த பதிலும் வரவில்லை
அலங்கோல நிலையில் உடல்
தீவிரமாக தேடி பார்த்ததில் அவர் அணிந்திருந்த உடைகள் கலைந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். மட்டுமல்லாது அவருடைய கழுத்தில் ரத்த காயங்களும் இருந்திருக்கின்றன. எனவே, ஆட்களை அழைத்து மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். ஆனால் மனைவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் ஏற்கெனவே வடமாநில தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் இவர்கள்தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
குற்றச்சாட்டு
ஆனால் மனைவி ஏற்கெனவே உரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். எங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாங்கள் காலங்காலமாக இந்த பகுதியில் ஆடுகளை மேய்த்து வருகிறோம். ஆனால் இப்படி எந்த சம்பவமும் இதற்கு முன்னர் நடந்ததில்லை. காட்டில் மனிதர்களை கொல்லும் அளவுக்கு எந்த உயிரினங்களும் கிடையாது. அதேபோல எங்கள் ஊரில் ஏராளமாக வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் அடிக்கடி மோதல் போக்கு நீடித்து வருகிறது. எங்கள் நீர் நிலையில் அவர்கள் அனுமதியின்றி மீன் பிடிக்கின்றனர்.
போராட்டம்
நாங்கள் விரட்டிவிட்டாலும் மீண்டும் மீண்டும் வந்து மீன் பிடிக்கின்றனர். இதேபோன்று ஒவ்வொரு விஷயத்திலும் சர்ச்சை எழுந்து வருகிறது. எனவே எங்களுக்கு இவர்கள் மீதுதான் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தோம். ஆனால் காவல்துறையினர் இதுவரை ஒரு வடமாநில தொழிலாளர்களை கூட விசாரிக்கவில்லை. விசாரணையும், சந்தேகமும் முழுக்க முழுக்க எங்கள் மீதுதான் இருக்கிறது. எனவே இந்த கொலை குற்றவாளி கைது செய்யப்படும் வரை நாங்கள் சடலத்தை வாங்க மாட்டோம்” என்று கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஏற்கெனவே வட மாநில தொழிலாளர்களிடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த வழக்கை எப்படி கையாள்வது என காவல்துறையினர் யோசித்து வருகின்றனர்.