4 பேராசிரியர்கள் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை.. செமஸ்டர் தேர்வுக்காக கல்லூரிக்கு சென்ற கலாஷேத்ரா மாணவிகள்
4 பேராசிரியர்கள் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை.. செமஸ்டர் தேர்வுக்காக கல்லூரிக்கு சென்ற கலாஷேத்ரா மாணவிகள்
சென்னை: பாலியல் புகாருக்குள்ளான 4 உதவி பேராசிரியர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்ததை அடுத்து இன்று செமஸ்டர் தேர்வுகளை எழுத கல்லூரிக்கு கலாஷேத்ரா மாணவிகள் வருகை தந்துள்ளனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ளது கலாஷேத்ரா பவுண்டேஷன். இங்கு பரத கலையையும் இசையையும் வளர்க்கும் விதமாக 1936 ஆம் ஆண்டு ருக்மிணி தேவி அருண்டேலினால் தொடங்கப்பட்ட ஒரு கல்லூரியாகும்.
இங்கு உலகெங்கும் மாணவிகள் வந்து தங்கி பயில்கிறார்கள். இது பிரம்மஞான சபையின் தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பரதம் பயின்று வருகிறார்
உதவி பேராசிரியர்கள்
இந்த நிலையில் உதவி பேரசிரியர்களாக ஹரி பத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர். இவர்கள் 4 பேரும் அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தில் கூறிய போதிலும் அவர்கள் யாரும் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கல்லூரிக்கு செல்லாமல் போராட்டம்
இதை கண்டித்து மாணவிகள் கடந்த சில தினங்களாக கல்லூரிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் கல்லூரிக்கு ஏப்ரல் 6 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவிகளிடம் மத்திய, மாநில பெண்கள் ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை நேற்று முன் தினம் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் சமர்ப்பித்தார்.
போராட்டம்
போராட்டத்தை கைவிட்டுவிட்டு கல்லூரிக்குத் திரும்பும்படி நடத்தப்பட்ட பல கட்ட பேச்சுவார்த்தையில் பாலியல் தொல்லை கொடுத்த 4 உதவி பேராசிரியர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை கல்லூரிக்கு திரும்ப மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர்
4 பேர் டிஸ்மிஸ்
ஆனால் மாணவிகளோ பாலியல் புகாருக்குள்ளான 4 பேர் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் கல்லூரிக்குள் போக முடியாது என தெரிவித்தனர். இதனால் பதற்றம் நிலவியது. இந்த நிலையில் சென்னை மாதவரத்தில் தோழி வீட்டில் பதுங்கியிருந்த பாலியல் புகாருக்குள்ளானவர்களில் ஒருவரான உதவி பேராசிரியர் ஹரி பத்மனை போலீஸார் கைது செய்தனர்.