Dogecoin-ஐ தூக்கிபிடிக்கும் எலான் மஸ்க்.. டிவிட்டர் லோகோ மாற்றியதால் டோஜ்காயின் 24% உயர்வு..!
Dogecoin-ஐ தூக்கிபிடிக்கும் எலான் மஸ்க்.. டிவிட்டர் லோகோ மாற்றியதால் டோஜ்காயின் 24% உயர்வு..!
எலான் மஸ்க் கட்டுப்பாட்டில் இருக்கும் டிவிட்டர் செயலியின் லோகோ திடிரென மாற்றப்பட்டுள்ளது. ட்விட்டர் தளத்தின் தனி அடையாளமாக இருக்கும் நீல பறவை கொண்ட லோகோ-வை எலான் மஸ்க் தடாலடியாக மாற்றியுள்ளார். விநோத நடவடிக்கைகளுக்கு பெயர் போன எலான் மஸ்க் டிவிட்டரின் நீல பறவை லோகோ-வுக்கு பதிலாக எலான் மஸ்க் ஆரம்பத்தில் இருந்து ஆதரவு தெரிவித்து வரும் டோஜ்காயின் லோகோ-வை டிவிட்டர் லோகோ-வாக மாற்றியுள்ளார்.
டோஜ்காயின் கிரிப்டோகரன்சி லோகோ-வில் ஜப்பான் நாட்டின் பிரபலமான நாய் இனமான ஷிபா இனு உள்ளது அனைவருக்கும் தெரியும். இதை டிவிட்டர் லோகோ-வாக எலான் மஸ்க் உத்தரவின் பெயரில் டிவிட்டர் நிர்வாகம் மாற்றியுள்ளது. இது தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பதை
கிரிப்டோகரன்சி பிரபலம் அடையும் நேரத்தில் விளையாட்டாக மென்பொருள் பொறியாளர்களான பில்லி மார்கஸ் மற்றும் ஜாக்சன் பால்மர் ஆகியோரால் உருவாக்கப்பட்டது தான் Dogecoin என்னும் கிரிப்டோகரன்சி. எலான் மஸ்க் ஆரம்பம் முதல் டோஜ்காயின்-க்கு அதிகளவில் ஆதாரவு அளித்து வரும் வேளையில் இவருக்காகவே பலர் இதில் முதலீடு செய்தனர். எதற்காக இதை செய்தார் தெரியுமா..?
எலான் மஸ்க்
எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கும் முடிவை எடுக்கும் முன் டிவிட்டர் தளத்தில் மக்கள் சுதந்திரமாக பேசவும், கருத்துக்களை பதிவிடவும் முடியவில்லை என்ற குற்றச்சாட்டை பதிவு செய்து, இதே டிவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் புதிய சமுக வலைத்தளம் வேண்டுமா என பதிவிட்டார்.
டோஜ்காயின் லோகோ இதற்கு wsbchairman என்ற டிவிட்டர் கணக்கின் உரிமையாளர் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து டிவிட்டரை வாங்கிவிட்டு அதன் லோகோ- வை டோஜ்காயின் ஆக மாறிவிடுங்க என டிவிட்டார். அதற்கு சிரித்துக்கொண்டே இது மட்டும் நடந்தால் அதிரடியாக இருக்கும் என எலான் மஸ்க் பதில் அளித்தார்.
வாக்குறுதியை
கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு பின்பு இதை செய்து காட்டியுள்ளார் எலான் மஸ்க். இதுமட்டும் அல்லாமல் லோகோ-வை மாற்றிவிட்டு பழைய டிவிட்டை தேடி பிடித்து கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார் எலான் மஸ்க். துளசி வாசம் மாறும், தவசி வாக்கு மாறமாட்டான் என்பது போல் சொன்னதை செய்துள்ளார் எலான் மஸ்க்.
டிவிட்டர் இணையதள பக்கம்
எலான் மஸ்க் டிவிட்டர் செயலின் இணையதள பக்கத்தின் லோகோ-வை டோஜ்காயின் லோகோ-வாக மாற்றியுள்ளார். பொதுவாக ஒரு நிறுவனத்தின் லோகோ என்பது அதன் அடையாளம், அப்படியிருக்கும் போது எலான் மஸ்க் செய்தது கார்பரேட் நிறுவனங்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் செயலி
மேலும் இந்த லோகோ மாற்றம், டிவிட்டர் இணைய பக்கத்தில் மட்டுமே மாற்றப்பட்டு உள்ளது, ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் செயலியில் மாற்றப்படவில்லை. இதனால் இது தற்காலிமான மாற்றமாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய CEO
எலான் மஸ்க் சில வாரங்களுக்கு முன்பாக டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ தேடி வரும் பயணத்தில் இருந்த போது பிப்ரவரி 15 ஆம் தேதி ஷிபா இனு நாயின் புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இவர் தான் புதிய CEO என கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் எலான் மஸ்க்.