அமெரிக்காவில் வேலை தேடிக்கொள்ள புதிய வழி.. டெக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
அமெரிக்க வாழ்க்கை பல கோடி இளைஞர்களுக்கு பெரும் கனவாக இருக்கும் வேளையில் இந்த கனவை நினைவாக்க ஒரு எளிய வழியை உருவாக்கியுள்ளது அமெரிக்க அரசு.
இப்புதிய அரசு அறிவிப்பு மூலம் திறமையான இளைஞர்கள் நாளைக்கே அமெரிக்காவுக்கு பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு வேலையை தேடிக்கொள்ள முடியும்
அமெரிக்கா
நீங்கள் சுற்றுலா பயணியாகவோ, அல்லது பிஸ்னஸ் விசா-வில் அமெரிக்கா சென்றிருந்தால் இனி புதிய வேலைவாய்ப்புக்கு விண்ணப்பம் செய்வது மட்டும் அல்லாமல் இண்டர்வியூவ்-க்கும் விண்ணப்பிக்க முடியும்.
பி-1 மற்றும் பி-2 விசா
ஆம், பி-1 மற்றும் பி-2 விசா மூலம் அமெரிக்கா சென்றவர்கள் இனி புதிய வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும், இண்டர்வியூவ் அட்டன்ட் செய்ய முடியும் என அமெரிக்க குடியுரிமை அமைப்பான USCIS டிவிட்டரில் B-1 or B-2 விசா பெற்றுள்ளவர்கள் இனி அமெரிக்காவில் தங்கியிருக்கும் காலத்தில் “Searching for employment” மற்றும் “interviewing for a position”-க்கு தகுதி அடைவார்கள் என தெரிவித்துள்ளது.
வொர்க் பர்மிட்
இந்த நிலையில் சுற்றுலா விசாவின் கீழ் அமெரிக்கா வந்து வேலை பெற்றுவிட்டால் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான வொர்க் பர்மிட் பெற விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளது USCIS அமைப்பு.