எல்.ஐ.சி. கட்டிடத்தில் தீ விபத்து – சென்னையில் பரபரப்பு
சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எல்.ஐ.சி. கட்டிடத்தின் மேல் தளத்தில் 12-வது மாடியில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கட்டிடத்தில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீவிபத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தற்போதுவரை தகவல் வெளியாகவில்லை. சென்னை எல்.ஐ.சி. கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.