தமிழகத்தில் ஆட்சி அமைப்பதுதான் எங்கள் கட்சியின் நோக்கம்..” அடித்து சொல்லும் சரத்குமார்!
"தமிழகத்தில் ஆட்சி அமைப்பதுதான் எங்கள் கட்சியின் நோக்கம்.." அடித்து சொல்லும் சரத்குமார்!
நாகர்கோவில்:தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம் என்றும், எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி மக்களுக்கு சேவை செய்து, மக்கள் திட்டங்களை வகுத்து ஆட்சி பீடத்தில் அமர்ந்து திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதுதான் ஒரு இயக்கத்தின் கொள்கையாக இருக்கும் என்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
இது தான் எங்கள் இலக்கு
தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம். எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி மக்களுக்கு சேவை செய்து, மக்கள் திட்டங்களை வகுத்து ஆட்சி பீடத்தில் அமர்ந்து திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதுதான் ஒரு இயக்கத்தின் கொள்கையாக இருக்கும். இலக்காகவும் இருக்கும். அந்த இலக்கிற்காக நாங்கள் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.
மக்களுக்கு சேவை செய்தால்
இதற்காக நிர்வாகத்தை சீர்படுத்திக் கொண்டே இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்வதுதற்கு தான் இந்த இயக்கம். இந்த கட்சி தொடங்கியதில் இருந்து மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. கட்சி நிர்வாகத்தை பலப்படுத்தி வருகிறோம். மக்களுக்கு சேவை செய்தால் நிச்சயம் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.