Gold: ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை.. இனி சாமானிய மக்கள் கனவில் தான் நினைக்கணுமா?

Gold: ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை.. இனி சாமானிய மக்கள் கனவில் தான் நினைக்கணுமா?

Gold: தங்கம் விலையானது கிட்டதட்ட 2000 டாலர்களுக்கு அருகில் காணப்படுகிறது.இது தொடர்ந்து தங்கத்தின் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆன 1980 டாலர்களுக்கு மேலாக காணப்படுகின்றது. ஆக மீண்டும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்ந்து டாலரின் மதிப்பும் மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், பங்கு சந்தைகளில் ஏற்ற இறக்கம் என்பது இருந்து வருகின்றது. ஆக இது தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. அதோடு அமெரிக்க பத்திர சந்தையின் தேவை சரியலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. இதன் காரணமாக இதுவும் சந்தைக்கு ஆதரவாக அமைந்துள்ளது.


வட்டி அதிகரிப்பு இருக்குமா?

அமெரிக்க மத்திய வங்கி கூட்டமானது மே மாதம் நடக்கவுள்ள நிலையில், அந்த கூட்டத்தில் வட்டி அதிகரிப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மற்றொரு தரப்பு மீண்டும் 2023ல் ஒரு அதிகரிப்பு இருக்கலாம் என கணித்துள்ளனர். ஆக இது மேற்கோண்டு தங்கம் விலையை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


எதிர்பார்ப்பு?

கமாடிட்டி நிபுணர்கள் தங்கம் விலையானது டாலரின் மதிப்பானது சற்றே மென்மையாக காணப்படும் நிலையில், மீண்டும் ஏற்றம் காணலாம். சர்வதேச சந்தையில் 2000 டாலர்களை உடைத்து மேலே செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இந்திய பியூச்சர் சந்தையில் 10 கிராமுக்கு 60,000 ரூபாய்க்கு மேலாக காணப்படுகிறது. இதே வெள்ளி விலையானது அவுன்ஸூக்கு 24 டாலர் என்ற லெவலிலும், இந்தியா சந்தையில் 72,500 ரூபாயாகவும் காணப்படுகிறது.


வங்கி நெருக்கடி

வங்கி துறையில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் பங்கு சந்தையில் பலத்த ஏற்ற இறக்கம் என்பது நிலவி வருகின்றது. ஆக இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. ஆக தங்கம் விலையானது விரைவில் புதிய உச்சத்தினை எட்டலாம். எனினும் முதலீட்டாளர்கள் தங்கம் விலையானது நிலையான ஒரு லெவலை எட்டும் வரையில் பொறுத்திருந்து முதலீடு செய்வது நல்லது.

ஸ்பாட் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 1998 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் கேப் அப் ஆகி மேலாக தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை அவுன்ஸூக்கு 0.33% அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது 0.33% அதிகரித்து, 24.067 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.